மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு தம்பதியர்கள் வாரத்திற்கு பத்துமுறை ஐ லவ் யூ என்ற வார்த்தையை உபயோகிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். முத்தமிட்டு முழு மனதோடு கூறப்படும் ஐ லவ் யூ என்ற வார்த்தை மிகப்பெரிய மாயாஜாலத்தை ஏற்படுத்துமாம்.

அமெரிக்காவில் இணையதளம் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. பரபரப்பான இந்த சூழ்நிலையில் வீட்டில் தம்பதியர் ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து பேசுவதே அரிதாக இருக்கிறதே என்று அலுத்துக் கொள்கிறீர்களா? அவ்வப்போது ஐ லவ் யூ சொல்லித்தான் பாருங்களேன் மகிழ்ச்சியான மண வாழ்க்கை நீடிக்கும் என்கின்றனர். மேற்கொண்டு படியுங்கள்

நெருக்கமான பேச்சுக்கள் :

தம்பதியர்கள் அடிக்கடி அன்பாக உரையாடவேண்டும். இது உறவின் பிணைப்பை அதிகரிக்கும். தவறுகள் ஏதும் செய்ய நேரிடும் போது தம்பதியரிடையே தயங்காமல் மன்னிப்பு கேளுங்கள் என்கின்றனர் நிபுணர்கள். தம்பதியர்கள் மாதம் மூன்று முறையாவது வெளியே சென்று உணவருந்துவதோ, சினிமாவிற்கோ, வெளியில் தங்கவோ வேண்டுமாம். இதனால் பிணைப்பு அதிகமாகும்.

அன்பான ஆறு இரவுகள் :

தம்பதியர் மாதத்திற்கு ஆறு இரவுகள் உறவில் ஈடுபடுவதோ, அன்பான அணைப்போடு உறங்குவதோ உறவின் பிணைப்பை நீடிக்கச் செய்யும் என்கின்றனர்.

ரொமான்டிக் சர்ப்ரைஸ் :

அவ்வப்போது சின்னச் சின்ன ரொமான்டிக் சர்ப்ரைஸ்களை கொடுக்கவேண்டுமாம். மாதம் மூன்று கொடுப்பது காதலையும், நேசத்தையும் அதிகரிக்குமாம்.

அழகான பயணம் :

திருமணம் என்பது ஒரு சுமையல்ல சுகமான பயணம். அதை தம்பதியர் இருவருமே இணைந்து அழகானதாக்க வேண்டும். வாழ்க்கையோட்டத்தில் சின்னச் சின்ன சங்கடங்கள் நேரிட்டாலும் அதை எளிதாக சமாளித்து இல்லறத்தில் சந்தோசமாக பயணத்தை தொடரவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
Previous Post Next Post